75 மில்லியன் ரூபாய் சட்டவிரோத வருமானம் தொடர்பாக விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஜூன் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகயீனம் காரணமாக இன்று நீதிமன்றில் முன்னிலை ஆகவில்லை என குறிப்பிட்டதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அத்தோடு முறைப்பாட்டாளரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சாட்சிகளை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
2010-2015 ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் ஈட்டபடாத சுமார் 75 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் சொத்துக்கு உரிமையாளராக இருந்தாக விமல் வீரவன்சவினால் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை அடுத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.