இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7702 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதேநேரம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 2122 டெங்கு நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை விட இந்த வருட ஆரம்பத்தில் 5580 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் / தலைவலி / மூட்டு வலி / வாந்தி 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.