கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2 ஆயிரத்து 437 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில், 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.
க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகள் உரிய அடையாள ஆவணங்களுடன், காலை 7.45 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு பிரவேசிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது