உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலாரஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.
பனிப்போருக்குப் பிறகு முன்னாள் சோவியத் பெலாரஸுக்கு ரஷ்யாவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைக்கான இடம் அல்லது நிலைக்கு துருப்புக்கள் அல்லது உபகரணங்களின் நகர்வைஇந்தக் கூட்டுப் பயிற்சிகள் குறிக்கின்றன என்று நேட்டோ கூறுகிறது.
உக்ரைன் மீதான பதற்றத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சி, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் மோதலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இன்று (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது.
பெலாரஸுடனான பயிற்சியில் சுமார் 30,000 ரஷ்ய துருப்புக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர், ரஷ்யாவும் பெலாரஸும் முன்னோடியில்லாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக கூறி, கூட்டுப் பயிற்சிகள் முக்கியமானவை என விபரித்தார்.
எவ்வாறாயினும், ரஷ்யாவின் ஐரோப்பிய ஒன்றிய தூதர் விளாடிமிர் சிசோவ், ‘உக்ரைன் மீதான நெருக்கடியைத் தணிக்க இராஜதந்திரம் உதவும் என்று தனது நாடு இன்னும் நம்புவதாகக் கூறினார். பெலாரஸில் தற்போது நிலைகொண்டுள்ள ரஷ்ய துருப்புக்கள் பயிற்சிக்குப் பிறகு நிரந்தர தளங்களுக்குத் திரும்புவார்கள் என்று அவர் மேலும், கூறினார்.
‘இந்த இராணுவப் பயிற்சிகளுக்கான தயாரிப்பைப் பார்க்கும்போது, இது நிச்சயமாக ஒரு தீவிரமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம்’ என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
எல்லையில் 100,000 துருப்புக்களை குவித்துள்ள போதிலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.
ஆனால், ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரத்திலும் வரலாம் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.