ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
தலைநகர் கீவ்வில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குளிர்காலக் குளிரைத் தாங்கிக்கொண்டு ஒன்றுதிரண்ட மக்கள், கொடிகளை அசைத்து, தேசிய கீதத்தைப் பாடி, அணிவகுத்துச் சென்றனர்.
‘பீதி பயனற்றது. நாம் ஒன்றுபட்டு சுதந்திரத்திற்காக போராட வேண்டும்,’ எனவும், சிலர் ‘போர் தீர்வு அல்ல’ என்று எழுதப்பட்ட பலகைகளை ஏந்தியும் சென்றனர். மற்றவர்கள் ‘எதிர்க்க வேண்டும்’ என்று தேசத்திற்கு அழைப்பு விடுக்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதனிடையே தலைநகரின் மூன்று மில்லியன் குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தைத் அரசாங்கம் தயாரித்துள்ளது.
உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான இராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
எனினும், மாஸ்கோ ஆதரவு பெற்ற பிரிவினைவாத கிழக்கு முழுவதும் 14,000க்கும் அதிகமான மக்களைக் கொன்ற எட்டு ஆண்டுகால மோதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் இப்போது ரஷ்யாவின் முழுப் படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
கிரெம்ளின் அதன் மேற்கு அண்டை நாட்டைச் சுற்றி சுமார் 130,000 துருப்புகளைக் குவித்துள்ளது, பெலாரஸ் முழுவதும் அதன் வடக்கே போர் பயிற்சிகளையும் அதன் தெற்கே கருங்கடலில் கடற்படை பயிற்சிகளையும் நடத்துகிறது.
‘எந்த நேரமும் போர் வெடிக்கலாம்’ வெடிக்கலாம் என்று அமெரிக்க எச்சரித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் இராஜதந்திரிகளை தலைநகர் கீவ்வில் இருந்து வெளியேற்றி, குடிமக்களை உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிடுகின்றன. நேட்டோ நட்பு நாடுகளும் கூடுதலான துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு அனுப்புவதன் மூலம் கியேவிற்கு ஆதரவை அதிகரித்துள்ளன.