• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக மக்களின் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டம் ஆரம்பம் !

மலையக மக்களின் தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டம் ஆரம்பம் !

shagan by shagan
2022/02/18
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையக மக்களின் இருப்பை பாதுகாக்கவும், தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். அனைத்து தோட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வேன்.  வண்ணங்களோ, சின்னங்களோ இதில் இல்லை. எனவே, எண்ணங்களுக்காக அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

வடிவேல் சுரேஷ்   தலைமையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர், தோட்டப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, நாட்டு நிலைவரம் பற்றியும், தொழில்சார் விடயங்கள் குறித்தும் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்ஓர் அங்கமாக நுவரெலியா – நானுஓயா தோட்டப்பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) தெளிவூட்டல் நடவடிக்கை இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,“மலையக மக்களுக்கு எதிராக அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள்,  மிகைவரி சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் கைவைப்பதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெருந்தோட்ட மக்களுக்கு தெளிவுப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம்.

எமது மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும், தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அனைத்து தோட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளேன். எமக்கு வண்ணங்களோ, சின்னங்களோ முக்கியமில்லை. மக்களின் எண்ணங்கள்தான் முக்கியம். எனவே, கட்சிபேதமின்றி அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் .  எமது மக்களுக்காக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அனைத்து வழிகளிலும் போராடுவேன்.

மிகைவரி சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து 25 வீதம் அறிவிடும் யோசனை எழுத்துமூலம் முன்வைக்கப்பட்டது. தற்போது அறவிடப்படாது என்ற உறுதிமொழி வாய்மூலம் வழங்கப்படுகின்றது. யோசனையை எழுத்துமூலம் வைத்தவிட்டு, உறுதிமொழியை வாய்மூலம் வழங்குவதை ஏற்கமுடியாது. அதுவும் எழுத்து வடிவில் வேண்டும். இந்த அரசை நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்லர்.

இந்த நாட்டில் மாற்றமொன்று அவசியம். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது. எனவே, முடியுமானால் தேர்தலொன்றை நடத்துமாறு அரசுக்கு சவால் விடுக்கின்றோம். அது எந்த தேர்தலாக இருந்தாலும் பரவாயில்லை, நடத்தினால் மக்கள் சக்தி எந்த பக்கம் என்பது தெரியவரும்.

அதேவேளை, மலையகத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் கோதுமை மா நிவாரணம் வழங்கும் நடைமுறை ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பினருக்கும் அது வழங்கப்பட வேண்டும். ஏனையோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கிவிட்டு, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வெறும் 40 ரூபா வழங்கப்படுகின்றது. இதுவும் ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

Next Post

நான்காவது ரி-20: அவுஸ்ரேலியா அணிக்கு 140 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!
இலங்கை

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

2026-05-06
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

2026-05-06
Next Post
நான்காவது ரி-20: அவுஸ்ரேலியா அணிக்கு 140 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

நான்காவது ரி-20: அவுஸ்ரேலியா அணிக்கு 140 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிப்பு!

நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் யோசனை திட்டம் தயாரிப்பு

அரசாங்கத்தினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.