மட்டக்களப்பு, செங்கலடி – கணேசபுரம் பகுதியில் தனது 11 வயது மகனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (05) இரவு கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த வீட்டில் சிறுவன் ஒருவன் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு (119) இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்ட வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர்.
பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தாய், இரும்பு கரண்டியை நெருப்பில் இட்டு பழுக்கக் காய்ச்சி, அதனைத் தனது 11 வயது மகனின் கையில் வைத்து அழுத்திச் சித்திரவதை செய்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனைச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக அவரது தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயே மகனுக்குச் சூடு வைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














