ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பேசக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அமைந்துள்ளது என சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது பாரதூரமான நிலைப்பாடுகள் தோன்ற ஏதுவாக அமையும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு, ஊடகவியலாளர் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் இது மிகவும் மோசமான செயற்பாடு என்றும் அவர் கண்டனம் வெளியிட்டார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள், இலங்கை தொடர்பாக நிலைப்பாடு எடுக்கும்போது பாரதூரமானதாக அமையக் கூடும் என்றும் தயாசிறி ஜயசேகர எச்சரித்தார்.