உக்ரைன், ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றத்தால், இந்தியாவின் வளா்ச்சி சவாலாக இருக்கும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய பொருளாதார பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சகர் இதனை கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தற்போது உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் இதன் தாக்கத்தை உலகம் உணரவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சில சமாதான நடவடிக்கைகள் விரைவில் நிகழும் என்றும் இதனால், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஸ்திரமடைய வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.