தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியால் (சனிக்கிழமை) கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழு மற்றும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தடை கிளிநொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களை ஓரம் கட்டிவிட்டு, கட்சிக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத புதிய உறுப்பினர்களை கட்சியின் முக்கிய பதவிகளுக்கு இணைக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கட்சியை காப்பாற்ற புதிய நிர்வாகம் செயற்பட்டு வருகின்றது.
இதன் தொடராக கிளிநொச்சியில் பிறிதொரு குழுவினரிடம் கட்சியை கையளிக்கும் நடவடிக்கையாக 19 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழு மற்றும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி புதிய நிர்வாகத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்ட போது கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த கூட்டத்தை நிறுத்துமாறு தடை விதித்துள்ளது.
புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மக்களின் அரசியல் அபிலசைகளை அடைவது தொடர்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் இதனை குழப்பும் வகையில் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த்தே.