கடந்த காலத்தை போன்றே வடக்கு மக்களை இன்றும் பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதன்படி வடக்கில் அபிவிருத்தி பணிகளை விரிவுப்படுத்த ஜனாதிபதியும், அரசாங்கம் பொறுப்புடன் செய்யப்பட்டுவருவதாகவும் கூறினார்.
இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தினர் மத்தியில் வரலாற்று காலம் முதல் நல்லுறவு பேணப்பட்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும் பௌத்த தேரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என கூறினார்.
30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் எப்பகுதிக்கும் சுதந்திரமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.