மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வகட்சி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.