ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்போது இந்தியாவுடன் ரூபாய் -ரூபிள் பரிவர்த்தனையில் வர்த்தக முறையை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய போதும் ரஷ்யாவுக்கு எதிரான ஐநா.சபை வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது.
இதனையடுத்து வரலாற்றில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.