தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் ஒழுங்கு ஆய்வு மற்றும் மேற்பார்வை அலுவலகத்தின் முன்னாள் தலைவரான லியு யான்பிங், சட்டம் ஒழுங்கை மீறியதாக சந்தேகிக்கப்படும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையகம் மற்றும் தேசிய மேற்பார்வை ஆணையகம் என்பன கூட்டிணைந்து நடத்துவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், சமூகக் கட்சியின் முன்னாள் மூத்த அரசியல் ஆலோசகர் ஒருவருக்கு இலஞ்சம் வாங்கியதற்காக சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
உள்நாட்டு மங்கோலியாவின் துணைத் தலைவராக இருந்த மா மிங் 150 மில்லியன் யுவானுக்கு மேல் சொத்து குவித்ததை நீதிமன்றம் கண்டறிந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.