புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய அமைச்சுக்களின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இடைக்கால அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நிதி அமைச்சராக அலி சப்ரி, நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டனர்.
இலங்கையில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மட்டும் பிரதமர் பதவியில் நீடிக்க, முழு அமைச்சரவையும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் அமைச்சுப்பதவியை பெறுபேற்று ஒருநாள் கழித்து நிதியமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.