சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்திற்குள் சட்டத்தரணிகள் குழுவொன்று பிரவேசித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை மீளப் பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானத்தை விமர்சித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை மீளப் பெற்றதால், சட்டமா அதிபரின் பங்கு அரசியலாக்கப்பட்டுள்ளது என்று கூறி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கவும் அவர்கள் சட்டமா அதிபரை வலியுறுத்தினர்.
இறையாண்மை மக்களிடம் உள்ளது எனவும், சட்டமா அதிபர் மக்களின் மேலாதிக்கத்திற்கு மாறாக செயற்பட முடியாது எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.