கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கொடையாளர்கள் மற்றும், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் நேரில் சென்று பாரவையிட்டனர்.
கிளிநொச்சி முகமாலை மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து கொடையாளர்களால் நிதியுதவி வழங்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த பணியின் முன்னேற்றங்கள் தொட்பிலு்ம, தொடர்ந்தும் குறித்த பணியை மேற்கொள்வது தொடர்பிலும் கள ஆய்வினை மேற்கொள்வதற்காக நேற்றைய தினம் குறித்த குழுவினர் வருகை தந்திருந்தனர்.
குறித்த குழுவில் கண்ணிவெடி அகற்றம் பணிக்காக நன்கொடைகளை வழங்கும் அமெரிக்கர்களின் பிரதிநிதிகளான Rodne Robedia, Briget R.Hess ஆகிய இருவரும் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளான Rulay Woodside, Shanlbeep Croos ஆகியோரும் கள ஆய்வு மேற்கொண்டனர்.
முகமாலை மேற்க பகுதியில் டாஸ் (DASH) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடியகற்றும் மனிதாபிமான பணியினை பார்வையிட்டனர். இதன்புாது குறித்த பகுதியில் மீட்கப்பட்டும் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பிலு்ம, அதனை அகற்றுவதில் ஏற்படுகின்ற சவால்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இதுவரை அகற்றப்பட்ட கண்ணிவெடிகள், பூரணப்படுத்தப்பட்ட பகுதிகள், மேற்கொள்ளப்படவேண்டிய பகுதிகள், தேவைப்பாடுகள் உள்ளிட்ட விளக்கமும் அவர்களிற்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கண்ணிவெடி அகற்றம் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஊழியர்களையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியதுடன். கள நிலைமைகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுடன் குறித்த குழுவினர் புகைப்படத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த விஜயத்தின்போது டாஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.