அவசரகால சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவசரகால சட்டம், ஊரடங்கு மற்றும் சமூக ஊடக கட்டுப்பாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
நாடுமுழுவதும் போராட்டம் இடம்பெற்றதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அதற்கு எதிராக சட்டத்தரணி லிஹினி பெர்னாண்டோ மற்றும் ரசிக ஜெயக்கொடி உள்ளிட்டவர்களால் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.