அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து தட்டுப்பாட்டினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதய நோயாளிகள், இருமல் மற்றும் சளிக்கு கூட வழங்குவதற்கு தேவையான மருந்துகள் இல்லை என கூறினார்.
டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் பாதித்துள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு அரச, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல தியாகங்களைச் செய்து இடுகம நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்கிய மக்கள் தற்போது பல சவால்களை எதிர்கொள்வதாகவும் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.