மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த கடந்த 23-03-2022 அன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது படையினர் மேற்கொண்ட அராஜகத்தை எதிர்த்து இப்போராட்டம் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, சர்வதேச விசாரணை வேண்டும், இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே கோஷத்தோடு போராட்டம் இடம்பெற்றது.
இதேவேளை 20 ஆம் திருத்தத்தை நீக்கு, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.