இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அழைப்பு விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிரீன் ஹைட்ரஜன், கிரீன் அமோனியா மற்றும் பேட்டரி சேமிப்பில் சொந்த தேவையையும் உலகத் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடல் காற்றில் இருந்து 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதிக திறன் கொண்ட 50 ஆயிரம் மெகாவொட் சூரிய மின்கலங்கள் உற்பத்தியில் பங்குபெற ஜெர்மனி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெர்மனிக்கு தேவயான கிரீன் ஹைட்ரஜன் மற்றும் அமோனியாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.