கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை சந்தித்துள்ளது.
இந்த சந்திப்பில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எந்த வகையான நடவடிக்கை அல்லது தலையீட்டை எடுக்கலாம் என்பது குறித்து இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர்.
தற்போதைய நிலைமை தொடர்பாக மக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை தலையிடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.