இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில் சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, தலதா அத்துகோரள, அஜித் பீ.பெரேரா, ரவூப் ஹக்கீம், ரவி ஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடு முன்னோக்கி செல்வதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என கூறினார்.