கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் அதிகளவான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் கொண்டு வரப்பட்டிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.