சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது .
இதில் 14 அத்தியாவசிய மருந்துகள் உட்பட மருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களின் சரக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது .
மேலும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர். அசேல குணரத்ன மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் விமான நிலையத்தில் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வருகை தந்திருந்தனர்.
இதேவேளை சீன அரசாங்கம் மற்றும் அந்நாட்டில் இயங்கிவரும் பல்வேறு பௌத்த அறக்கட்டளைகள் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளினால் இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்