நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் ஏனைய 11 பேரும் போதை விற்பனை பிரதிநிதிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்தபோது, அவர்களிடமிருந்து 2880 மில்லிகிராம் ஹெரோய்ன், 560 மில்லிகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 – 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் நாவலப்பிட்டி, ஓவிட்ட, ஆகரஓயா, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேநபர்கள் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) நாவலப்பிட்டி பதில் நீதவான் சுனெத்ரா கொட்டவலகெதர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.