நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை அரிசி கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அது ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே தெரிவித்துள்ளார்.
அறுவடை போதுமானதாக இல்லாவிட்டால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளும் கட்சி பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.