உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2022’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
35 ஆண்டுகளாக குறைந்து இருந்த அணு ஆயுத உற்பத்தி உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக மீண்டும் உயரும் என நிபுணர்கள் இதன்போது கணித்துள்ளனர்.
உலகளவில் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய 9 நாடுகளிடம் மொத்தம் 12 ஆயிரத்து 705 அணு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளன.
உலக அளவில் அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 5 ஆயிரத்து 977 அணு ஆயுதங்கள் உள்ளன.
அடுத்தப்படியாக அமெரிக்காவிடம் 5 ஆயிரத்து 428 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.