காலி முகத்திடல், கோட்டா கோகம போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி முற்போக்கு சிந்தனை இளைஞர்களின் ஒழுங்குபடுத்தலில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கோட்டா கோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், போராட்டக்களத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்காக கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
யாழிலிருந்து கிளிநொச்சிக்கு புகையிரதத்தில் விஜயம் மேற்கொண்ட அவர்களை இளைஞர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து, கந்தபுரப் 2 ஆம் இலக்க பாடசாலை மற்றும் ஆனைவிழுந்தான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைகளுற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கற்றல் உபகரணங்களை மாணவர்களிடம் அவர்கள் கையளித்தனர்.
இந்த விஜயத்தில் 10 இளைஞர்கள் வருகை தந்திருந்ததுடன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.