அடுத்த வருடம் கடும் மின் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 15 – 20ஆம் திகதிக்குள் இலங்கையின் நிலக்கரி இருப்புக்கள் குறைவடையும் எனவும் எதிர்காலத்தில் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் இந்த நிலை ஏற்படுமென அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தடுக்க சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசியல் அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.