நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்றப் போவதில்லை என தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
தம்மிக பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் உயர் நீதிமன்றில் இதனை அறிவித்தார்.
மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற போதே, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
அத்தோடு ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.