அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்தல், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் மேற்பார்வை குழுக்களை ஸ்தாபித்தல், மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு பாராப்படுத்தல் போன்றன 21ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடங்குகின்றன.
The 21 amendment was tabled and passed in cabinet today and will be tabled in @ParliamentLK soon. Like to thank @RW_UNP and @wijerajapakshe for pushing it through
— Harin Fernando (@fernandoharin) June 20, 2022