போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
வடக்கு போர்த்துகலில், ஸ்பெயின் எல்லைக்கு அருகில் உள்ள ஃபோஸ் கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் தற்போது, தீ பரவி வருகிறது.
தெற்கு ஸ்பெயினில், கோஸ்டா டெல் சோல் அருகே, மிஜாஸ் மலைகளில் பரவிய காட்டுத் தீயில் இருந்து சுமார் 2,300பேர் வெளியேற வேண்டியிருந்தது.
டோரெமோலினோஸ் கடற்கரையில் விடுமுறைக்கு வருபவர்கள் மலைகளில் பெரிய புகை மூட்டங்களைக் கண்டனர், அங்கு பல விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துகின்றன.
அங்குள்ள தீ மற்றும் போர்டியாக்ஸுக்கு சற்று தெற்கே ஏற்பட்ட தீ, கிட்டத்தட்ட 10,000 ஹெக்டேர் (25,000 ஏக்கர்) நிலத்தை அழித்துவிட்டது. சுமார் 3,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய் முதல், போர்த்துகலில் வெப்பநிலை 47 செல்சியஸ் ஆகவும், ஸ்பெயினில் 40 செல்சியஸ்க்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. இரு நாடுகளிலும் 300க்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.