மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பேரவையொன்று உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் குறித்து திட்டவட்டமான புரிதலுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அந்தவகையில் தேசிய பேரவை ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இதனை அடுத்து குறித்த பேரவையில் எட்டப்படும் முற்போக்கான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்பதனால் அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச கூறினார்.
நாட்டை பயனுள்ள வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தேசிய ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தினார்.