முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் இலங்கை பிரஜை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்படுவார் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.