“ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்.” என மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
ஹட்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி கூட்டமைப்பின் தலைவர் கணேசலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட வேண்டியவர்கள் சுகந்திரமாக நடமாடுகின்றதோடு நீதிக்காக போராடியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர் எனவே, கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை பொருளாதார சிக்கலை பயன்படுத்தி, மலையக சிறார்கள் இலக்கு வைக்கப்படுகின்றதோடு மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.