சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டுர் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு புது க்குடியிருப்பு பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2000 நாட்கள் கடந்து செல்கின்ற நிலையில், இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கோஷங்களை அனுப்பியதுடன் கருப்பு கொடிகளையும் காணாமல் போன தமது பிள்ளைகள் உறவுகளில் புகைப்படங்களையும் தாங்கி இருந்தனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சந்தியிலிருந்து பிரதான சந்திப்பவரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளரினால் வேலன்ஸ் சுவாமிகளிடம் மகளிர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.