இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் பொறுப்பு சீனாவிற்கும் ஏனைய பெரும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் சந்தையில் 25 விகிதமான நாடுகளும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60 விகிதமான நாடுகள் கடன் நெருக்கடியில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா தெரித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கைக்கு பொதுக் கடனாளிகள் விரைவாக பேச்சுவார்த்தையை மேற்கொள்வார்கள் என்றும் தனியார் கடன் வழங்குநர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என தான் நம்புவதாகவும் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கூறியுள்ளார்.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் லசார்ட் நிதி ஆலோசனைக் குழு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.