சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக பெற்று வந்த மூவர் கைதாகி பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நீண்டகாலமாக மின்சார மின்மானியில் நுட்பமாக மாற்றம் செய்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று வந்த மூவர் அடையாளம் காணப்பட்டு கொழும்பில் இருந்து வந்த மின்சார சபை புலனாய்வு பிரிவினரால் கைது (வியாழக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் கைதான மூவரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சான்று பொருளான மின்மானியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவரையும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் நீதிவான் விடுவித்ததுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆந்திகதி வரை வழக்கு மறுதவணை இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சட்ட விரோத செயல்பாட்டில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர் பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகியாக செயற்பட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்கதக்து.