முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் பொன் விழா நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன் மற்றும் உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விசுவமடு மாகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் விசுவமடு வள்ளுவர்புரம் கலைக்கூடம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.