மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின் ஒரு பகுதி தோட்டவெளி மீனவர்களுக்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்
இந்த நடவடிக்கை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உப்புக்குளம் அல்-அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக உப்புக்குளம் அல்-அஸ்ஹர் மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கவலை வெளியிட்டார்.