முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியோக செயலாளரான சுகீஷ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை இன்று (21) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது நீதிவான் அவரை ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
2022-ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலும், ஜனாதிபதிக்கான செலவுத் தலைப்பின் கீழ் இரு ஊதியங்களைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு சுகீஷ்வர பண்டார மீது சுமத்தப்பட்டுள்ளது.













