யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக ‘திறன்காண் நிகழ்ச்சி-2022″ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அழகு மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வானது, எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக பணிப்பாளர் மற்றும் ஏற்பாடுக் குழுவினர் தெரிவித்தனர்.
பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வானது, இளைஞர்களின் நிறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் பன்முகத்திறன்காண் போட்டிகளான, மணப்பெண் அலங்காரம் மற்றும் உயர் நாகரிக அலங்காரப் போட்டிகள், பானங்களில் பல வர்ணங்களை வெளிப்படுத்தும் மொக்டெய்ல் போட்டி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
இதற்கு இணையாக உள்ள 50க்கு மேற்பட்ட உயர், நடுத்தர மற்றும் சிறிய வியாபார நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் காட்சியறைகளும், பார்வையாளர்களின் நலன்கருதி அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் குறிப்பாக, கண், காது, உடல் நிறைச்கட்டி, குருதி அமுக்கம் மற்றும் சர்க்கரை பரிசோதனை என்பவற்றினை இலவசமாக செய்து கொள்வதற்கான இலவச மருத்துவ முகாமும் இந்நிகழ்வின் பிரதானமான அங்கங்களாக உள்ளன.