மாகாண செயலகத்திற்குட்பட்ட நிலக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு UNHCR உதவியுடன் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் மற்றும் அச்சு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாகாண காணி ஆணையாளர் அலுவலக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 23 பிரதேச செயலகத்தின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதன்படி அம்பாறை மாவட்டத்தில் ஏழு மாகாண செயலக அலுவலகங்களுக்கும், திருகோணமலையில் எட்டு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலக அலுவலகங்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி. தசாநாயக்க மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.