அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் அல்லது விவாதங்களைவிட நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளைத் தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்துக்குரியது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தனக்கு வாக்குவாதம் செய்வதில் பிரச்சினை இல்லை என்றும் தெருவுக்கு வந்தால் ரத்தம் சிந்த நேரிடும் என்று சிலர் சொல்கிறார்கள், இரத்தம் சிந்துவதற்கு முதல் நீங்கள் வாழ வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த விவசாயிகளும் உழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பற்றி பேச வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் பேசுமாறு அதற்குதான் நாடாளுமன்றம் உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே சமயம் சுற்றுலா பயணிகளை இங்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றும் இந்தப் பணியை முறையாகத் தொடர்வோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.