தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.