உக்ரைன் தனது சொந்தப் பகுதியில் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய குண்டை பயன்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.விற்கு குற்றச்சாட்டுகளை விவரிக்கும் கடிதத்தை அனுப்பிய மொஸ்கோ செவ்வாயன்று பாதுகாப்பு சபை கூட்டத்தில் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டு போரை தீவிரப்படுத்துவதற்கான சாக்குப்போக்கு என மேற்கத்தேய நாடுகள் மற்றும் உக்ரேனிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கத்தேய நாடுகள் அவற்றை நிராகரிப்பது முட்டாள்தனம் என கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக அணுவாயுதத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்ற தகவலின் பின்னணியில் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
எவ்வாறாயினும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ரஷ்யாவை எச்சரித்துள்ளது.