மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை அவருக்கான பயண தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ராலை தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல நிதி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.