நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறைந்துள்ளதாக மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் வர்த்தக சங்கத் தலைவர் உபசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் விலையில் பெரிய அளவில் குறைவு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஒரு கிலோ போஞ்சி மற்றும் கரட்டின் மொத்த விலை 300 ரூபாயாகவும் தம்புள்ளை மொத்த வர்த்தக நிலையத்தில் 275 ரூபாயாகவும் அங்கு சில்லறை விலை 305 மற்றும் 360 ரூபாயாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஒரு கிலோ கோவா மொத்த விலை 250 ரூபாயாகவும் தம்புள்ளையில் 138 ரூபாயாகவும் ஒரு கிலோ கோவா சில்லறை விலை 360 ரூபாயாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை 180 ரூபாயாகவும் தம்புள்ளையில் 125 ரூபாயாகவும் சில்லறை விலை 135 முதல் 230 ரூபாய் வரை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.