மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்காக பிரித்தானியாவின் முன்னாள் ரோயல் விமானப்படை விமானிகளை சீனா நியமித்துள்ளது.
தி நியூயார்க் டைம்ஸில் லண்டன் பணியகத் தலைவர் மார்க் லேண்ட்லர், பிரித்தானியா தனது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கு பி.எல்.ஏ. உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒப்பந்தங்களைத் தடுக்க விரும்புவதாகக் கூறினார்.
சீனா 30 ஓய்வுபெற்ற பிரித்தானிய இராணுவ விமானிகளை பயிற்சிக்காக நியமித்துள்ளது.
இதில் சிலர் அதிநவீன போர் விமானங்களை செலுத்தியுள்ளனர். இந்த நடைமுறை பிரித்தானிய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு, தெரிவித்துள்ளது.
சீனாவினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பிரித்தானிய விமானிகளில், ரோயல் விமானப்படையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஆயுதப் படைகளின் பிற பிரிவுகளில் பணியாற்றியவர்களும் அடங்குவர் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நடைமுறையை நிறுத்துவதற்கு நட்பு நாடுகளுடன் இணைந்து முயற்சிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் தொடர்பான பயணத் தடைகளால் பிரித்தானியர்களை பணிக்கமர்த்தும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் லேண்ட்லர், ஓய்வுபெற்ற விமானிகள் இந்த பணியை ஏற்றுக்கொண்டுள்ளமையானது, உளவுவேலை மற்றும் பிற குற்றங்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம் உள்ளிட்ட பிரித்தானிய ஷ சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒப்பந்தங்கள் இலாபகரமானவை, ஆண்டுக்கு சுமார் 270,000 அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டவல்லவை. பல ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்ற விமானிகளுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தனியார் அகாடமி மூன்றாம் தரப்பினருக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்வதற்காக சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சீனர்களால் பணியமர்த்தப்பட்ட விமானிகள் எவரும் பிரித்தானிய கடற்படையில் மிகவும் மேம்பட்ட மற்றும் விலையுயர்ந்த போர் விமானமான கு-35 ஐ இயக்கவில்லை.
ஆனால் பலர் டைபூன், ஹாரியர், ஜாகுவார் மற்றும் டொர்னாடோ போன்ற பழைய தலைமுறை போர் விமானங்களை இயக்கியுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய விமானிகள் தங்கள் சீன சகாக்களுக்கு சீன விமானங்களில் பயிற்சி அளித்தாலும், சீனர்கள் பிரித்தானிய மற்றும் மேற்கத்திய தந்திரோபாயங்கள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பதாக பி.எல்.ஏ.அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக மோசமடைந்துள்ளன, பிரித்தானியாவின் முன்னாள் காலனியான ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீது பீஜிங்கின் அடக்குமுறையைக் பிரித்தானிய அரசாங்கம் கண்டித்துள்ளது.
2020 ஜூலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம், சீன தொலைத்தொடர்பு நிறுவனமான குவாவி நிறுவனத்திடமிருந்து அதிவேக பிராட்பேண்ட் வலையமைப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதை தேசிய பாதுகாப்பு காரணங்களை காண்பித்து தடை விதித்திருந்தது.
இதற்கிடையில், இறுதியாக இராஜினாமாவ் செய்த பிரதமர் லிஸ் ட்ரஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை மதிப்பாய்வின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் அவர் சீனாவை அச்சுறுதல் நாடாக அறிவித்துள்ளார்.